உலகம்

இராக்கில் வான்வழித் தாக்குதலில் நான்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலி!

4th Mar 2021 04:31 PM

ADVERTISEMENT

 

பாக்தாத்: இராக்கில் பாதுகாப்புப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலியாகினர்.

இதுதொடர்பாக தியாலா மாகாண காவல்துறை அதிகாரி அலா அல் ஸாதியினை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

இராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 135 கிமீ தொலைவில் அமைந்துள்ள கிழக்கு மாகாணமான தியாலாவில் உள்ள ஜலவாலா என்னும் நகருக்கு அருகே, ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஒளிந்திருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் போர் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதில் நான்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலியாகினர்.

ADVERTISEMENT

தியாலாவில் தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் கூட, இரான் நாட்டுடனான அதன் எல்லைப் பகுதியில் உள்ள மறைவிடங்களில் பதுங்கியுள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள், தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் மீது கெரில்லா தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT