உலகம்

ஐஸ்லாந்தில் ஒரே வாரத்தில் 17 ஆயிரம் நில அதிர்வுகள்: மக்கள் கலக்கம்

4th Mar 2021 04:21 PM

ADVERTISEMENT

ஜஸ்லாந்து நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 17 ஆயிரம் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

பல எரிமலைகளால் சூழப்பட்ட நாடு ஐஸ்லாந்து. ஐரோப்பாவில் சிறிய
தீவு நாடாக உள்ள இந்த நாட்டில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 17 ஆயிரம் முறை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக குறுகிய காலத்தில் அதிக அளவில் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

அதிக அளவிலாக எரிமலைகள் உள்ளதால் நில அதிர்வுகளின் காரணமாக அவற்றில் வெடிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக எண்ணி மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT