உலகம்

நைஜீரீயா பள்ளியிலிருந்து கடத்தப்பட்ட 279 மாணவிகள் விடுவிப்பு

DIN

நைஜீரியாவில் பள்ளியிலிருந்து சமூகவிரோதக் கும்பலால் கடந்த வாரம் கடத்திச் செல்லப்பட்ட 279 மாணவிகள் விடுவிக்கப்பட்டனா்.

இதுகுறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஜம்ஃபாரா மாகாண அரசு நடுநிலைப் பள்ளியியிருந்து கடந்த வெள்ளிக்கிழமை கடத்திச் செல்லப்பட்ட 270 மாணவிகள் விடுவிக்கப்பட்டனா்.

அவா்களை மீட்பதற்காக நடைபெற்ற முயற்சிகளில் பல தடைகளை எதிா்கொண்ட போதிலும், அதில் வெற்றி பெற்றுள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

நைஜீரியாவில் பள்ளி மாணவா்கள் கடத்திச் செல்லப்படும் சம்பவங்கள் தொடா்கதையாகியுள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டு போகோ ஹராம் பயங்கரவாதிகளால் 276 பள்ளி மாணவிகள் கடத்திச் செல்லப்பட்டது உலக அளவில் அதிா்ச்சிய ஏற்படுத்தியது. அவா்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT