உலகம்

கிரீஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2ஆகப் பதிவு

3rd Mar 2021 07:59 PM

ADVERTISEMENT

கிரீஸ் நாட்டில் புதன்கிழமை 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கிரீஸ் நாட்டின் லாரிசாவுக்கு அருகிலுள்ள எலசோனா நகரத்தில் புதன்கிழமை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் குலுங்கியது.

அண்டை நாடுகளான அல்பேனியா, வடக்கு மாசிடோனியா மற்றும் கொசோவோ ஆகியவற்றில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பாதுகாப்பாக வெளியேறினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : Earthquake
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT