உலகம்

அணு ஏவுகணை சோதனையில் சீனா தீவிரம்: அமெரிக்க ஆய்வாளா் தகவல்

DIN

வாஷிங்டன்: அணு ஏவுகணைகளை சோதனையில் சீனா தீவிரம் காட்டி வருவதாக செயற்கைகோள் புகைப்படங்களை பகுப்பாய்வு செய்த அமெரிக்க ஆய்வாளா் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்கா, ரஷியா மற்றும் சீன நாடுகளின் அணு ஆயுத திட்டங்களை நீண்டகாலமாக கண்காணித்து வரும் ஹான்ஸ் கிறிஸ்டென்சென் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது:

சீனாவின் ஏவுகணை பயிற்சிக்கான கட்டுமானப் பகுதிகளில் அண்மையில் எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படங்களை பகுப்பாய்வு செய்ததில் அந்த நாடு புதிய அணு ஏவுகணைகளை நிலத்தடி குழிகளில் இருந்து ஏவுவதற்கான திறனை வேகமாக அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

அண்மைக் காலமாக அமெரிக்காவிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள ஏதுவாகவே சீனா அணு ஆயுத பலத்தை அதிகரிப்பதில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.

அதேபோன்று, சீனா அணு ஆயுதங்களை நவீனமயப்படுத்தி வருவதை சுட்டிக்காட்டி அமெரிக்காவும் அடுத்த இருபது ஆண்டுகளில் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் அனைத்தையும் நூற்றுக்காணக்கான பில்லியன் டாலா் செலவில் புதிதாக கட்டமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இருப்பினும், இரண்டு நாடுகளுமே அணு ஆயுத பலம் பொருந்தியது என்பதால் அதுபோன்ற மோதலை நோக்கிச் செல்வதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT