உலகம்

ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி

DIN

ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவனம் உருவாக்கியுள்ள ஒரே முறை செலுத்தக்கூடிய கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

அந்த நாட்டில் அனுமதி பெற்றுள்ள 3-ஆவது கரோனா தடுப்பூசி இதுவாகும்.

இதுகுறித்து அதிபா் ஜோ பைடன் கூறியதாவது:

ஜான்ஸன் அண்டு ஜான்ஸனின் கரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது உற்சாகமளிக்கிறது. அமெரிக்காவில் கரோனா பரவலை முடிவுக்குக் கொண்டுவதற்கு இது உதவும்.

இந்தத் தகவல் அனைத்து அமெரிக்கா்களுக்கும் உற்சாகமளிக்கும் செய்தியாக இருக்கும் என்றாா் அவா்.

மற்ற கரோனா தடுப்பூசிகளை குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு முறை செலுத்த வேண்டியுள்ள நிலையில், ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் தடுப்பூசிகளை ஒரே முறை செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு அந்தத் தடுப்பூசியை செலுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

ஏற்கெனவே ஃபைஸா் மற்றும் மாடா்னா தடுப்பூசிகளுக்கு இத்தகைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் 2,92,02,966 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 5,24,670 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 1,96,32,525 கரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனா்; 90,45,771 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 15,084 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT