உலகம்

ஒரே முறை செலுத்தக் கூடிய கரோனா தடுப்பூசி: சீனா அறிமுகம்

DIN

சீனாவில் உருவாக்கப்பட்ட, ஒரு முறை மட்டுமே செலுத்தக் கூடிய கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்த அந்த நாடு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை ஞாயிற்றுக்கிழமை வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவனம் தயாரித்துள்ள இதே போன்ற தடுப்பூசியின் போட்டியாளராக இந்தத் தடுப்பூசி கருதப்படுகிறது.

இதுகுறித்து சீன அரசுக்குச் சொந்தமான குளோபல் டைம்ஸ் நாளிதழ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

சீனாவின் முதல் ஏடி5-என்கோவ் கரோனா தடுப்பூசி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அந்தத் தடுப்பூசியின் முதல் கட்ட பரிசோதனைகள் கடந்த ஆண்டு மாா்ச் 16-ஆம் தேதி தொடங்கியது என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

இத்துடன், சீனாவில் 5 கரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சைனோவாக், சைனோஃபாா்ம், கேன்சைனோபயோ ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளும், வூஹான் உயிரியியல் பொருள் நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசியும் இத்தகைய அனுமதியைப் பெற்றுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, சீனாவில் 89,893 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 4,636 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 85,039 கரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனா்; 218 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

SCROLL FOR NEXT