உலகம்

பிரேசிலில் புதிதாக 34,027 பேருக்கு கரோனா: பலி 721

1st Mar 2021 11:22 AM

ADVERTISEMENT

 

பிரேசிலில் இன்று காலை நிலவரப்படி 34,027 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கடந்த 24 மணி நேர நிலவரத்தை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 34,027 பேருக்குத் தொற்று பரவியுள்ளதையடுத்து, மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,55,1,259 ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

கரோனா தொற்றால் புதிதாக 721 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,54,942-ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக  கரோனா பலி எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் பிரேசில் உள்ளது. நாட்டில் சாவ் பாலோ மாநிலம் கரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்த பாதிப்பு 2,04,1,628 ஆகவும், பலி 59,493 ஆகவும் பதிவாகியுள்ளது. 

Tags : brazil coronavirus கரோனா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT