உலகம்

மாற்று அறுவை சிகிச்சைக்கு சொந்த சிறுநீரகத்தையே பெற்றவர் 

25th Jun 2021 03:36 PM

ADVERTISEMENT

 

ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த நோயாளி ஒருவருக்கு அவரது சொந்த சிறுநீரகத்தையே புதுப்பித்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்திய அதிசயம் நிகழ்ந்துள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளில் முதல் முறையாக இதுபோன்றதொரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அதாவது, சிறுநீரகத்தில் புற்றுநோய் கட்டி வந்த அலி ஷம்சி என்பவருக்கு, அறுவை சிகிச்சை செய்து, கட்டி வந்த சிறுநீரகத்தை துண்டித்து வெளியே எடுத்து, அதை, உடல் உறுப்புகளை பாதுகாக்கும் திரவத்தில் வைத்தனர். 

ADVERTISEMENT

பிறகு, அந்த சிறுநீரகத்தில் இருந்த கட்டியை, மற்ற நல்ல செல்களுக்கு சேதாரம் ஏற்படாமல் மிகச் சிறப்பாக அகற்றிய மருத்துவர்கள், கட்டி அகற்றப்பட்ட இடத்தை தையல் போட்டு, அதனை பழையபடி சிறுநீரகமாக வடிவமைத்தனர். 

இதையும் படிக்கலாமே.. தடுப்பூசி செலுத்திக் கொண்டால்.. இதெல்லாம் நன்மைகள் : ஆய்வில் தகவல்

பிறகு, அறுவை சிகிச்சைக்கு வந்த நபருக்கு அவரது சிறுநீரகத்தையே, கட்டியை அகற்றி புதுப்பித்து மீண்டும் பொறுத்தி, அதனை செயல்பட வைத்துள்ளனர்.

உடலிலிருந்து சிறுநீரகத்தை வெளியே எடுத்து, சிறுநீரகத்திலிருந்து கட்டியை அகற்றிவிட்டு, மீண்டும் அதை உடலில் பொருத்தும் இந்த அறுவை சிகிச்சை சுமார் 11 மணி நேரங்கள் நடைபெற்றுள்ளது. 

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், 60 வயதாகும் அலி ஷம்சி பிறக்கும் போதே ஒரே சிறுநீரகத்துடன் பிறந்தவர். அந்த சிறுநீரகத்தில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவரது சிறுநீரகத்தின் ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி, மருத்துவர்கள் அவரது சிறுநீரகத்தையே வெளியே எடுத்து கட்டியை அகற்றிவிட்டு மீண்டும் பொருத்த முடிவு செய்தனர் என்கிறார்கள்.
 

Tags : surgery TRANSPLANT kidney
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT