உலகம்

இலங்கையில் 11 வயது சிங்கத்திற்கு கரோனா தொற்று

25th Jun 2021 06:46 PM

ADVERTISEMENT

இலங்கையில் உள்ள மிருகக்காட்சி சாலையில் 11 வயதான சிங்கத்துக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.

உலகின் பல பகுதிகளில் உள்ள மிருகக்காட்சி சாலை விலங்குகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சோதனையின் மூலம் கண்டறியப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இலங்கையின் கொழும்புவில் உள்ள தெஹிவாலா உயிரியல் பூங்காவில் 11 வயதான ஷீனா எனப் பெயரிடப்பட்ட சிங்கத்திற்கு சளித் தொந்தரவு இருந்ததைத் தொடர்ந்து அவற்றின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் சிங்கத்திற்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. 

முன்னதாக இந்த மாதத் தொடக்கத்தில் தோர் எனப் பெயர் கொண்ட 12 வயதான ஆண் சிங்கத்திற்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கங்கள் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளன.

ADVERTISEMENT

இதற்கு முன்பு ஸ்பெயினின் பாா்சிலோனா, அமெரிக்காவின் பிராங்க்ஸ் நகரங்களில் உள்ள உயிரியல் பூங்காக்களில் சிங்கங்கள் மற்றும் புலிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் தெலங்கானா, செங்கல்பட்டு வண்டலூர், ஹைதராபாத்தில் உள்ள விலங்கியல் பூங்காக்களின் சிங்கங்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags : srilanka COVID19 Lion affected coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT