ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,182 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அந்த நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 53,88,695 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 3,038 பேருக்கு (15.1 சதவிகிதம்) எவ்வித அறிகுறியும் இல்லாமல் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி 17,594 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், வியாழக்கிழமை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நோய்த் தொற்று அதிகரிக்கும் விகிதம் 0.38 சதவிகிதமாக அதகரித்துள்ளது.
மேலும் 568 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,31,463 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13,505 பேர் மருத்துவமனைகளிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 49,15,615 பேர் குணமடைந்துள்ளனர்.