உலகம்

தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி

24th Jun 2021 08:34 PM

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 8 பேர் பலியானார்கள். 
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் நேற்று கலாச்சார நிகழ்வு நடைபெற்றது. அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்த நபர் வாகனம் மூலம் தப்பியோடிவிட்டார். இந்த சம்பவத்தில் 5 பேர் பலியானார்கள். 
காயமடைந்தவ்ரகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மேலும் 3 பேர் பலியானார்கள். இத்துடன் இச்சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. 
எனினும், தப்பியோடிய மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

Tags : South Africa
ADVERTISEMENT
ADVERTISEMENT