ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் மாகாணத்தில் 130 தலிபான்கள் ராணுவத்திடம் வியாழக்கிழமை சரணடைந்தனர்.
ஆப்கனில் ராணுவத்தினருக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையே தொடர் மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 130 பேர் ஆப்கன் நாட்டின் தேசிய புலனாய்வு அமைப்பான தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர்.
சரணடையும் போது அவர்கள் 85 ஏ.கே .47 துப்பாக்கிகள், ஐந்து பி.கே துப்பாக்கிகள், ஐந்து கையெறி குண்டுகள் மற்றும் வெடிமருந்துகளை ராணுவத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து தலிபான் அமைப்பு கருத்து தெரிவிக்கவில்லை.