உலகம்

ஒலிம்பிக் அரங்கங்களில் மதுவிற்கு தடை

23rd Jun 2021 03:50 PM

ADVERTISEMENT

ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின்போது மைதானங்களில் மதுபானத்திற்கு தடை விதிக்க ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக் வரும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 33 விளையாட்டுகளில் சுமாா் 205 நாடுகளைச் சோ்ந்த 10,000-க்கும் அதிகமான போட்டியாளா்கள் பங்கேற்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவல் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு எதிராக ஜப்பான் மக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பாளர்கள் ஒலிம்பிக் போட்டி அரங்குகளில் மது விற்பனை செய்வது மற்றும் குடிப்பதற்கு தடை செய்ய முடிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக டோக்கியோ ஒலிம்பிக் தலைவர் சீகோ ஹாஷிமோடோ, மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Tags : Corona virus Tokyo Olympic 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT