உலகம்

நேபாளத்தில் நாளைமுதல் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடக்கம்

23rd Jun 2021 06:04 PM

ADVERTISEMENT

நேபாளத்தில் நாளைமுதல் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் என அந்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை காரணமாக மே மாத தொடக்கம் முதல் நேபாளத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது கரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து மீண்டும் விமான சேவையை தொடங்குவது குறித்து அந்நாட்டு அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, நாளை முதல் சர்வதேச விமான சேவையும், ஜூலை 1ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவையும் தொடங்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், முதற்கட்டமாக உள்நாட்டு விமான சேவையில் 50 சதவீதம் மட்டுமே இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : nepal Flight Service
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT