உலகம்

கொலம்பியா: லட்சத்தைத் தாண்டியது கரோனா பலி

DIN

போகடா: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை ஒரு லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 648 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். அதையடுத்து, நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இத்துடன், 1,00,582 போ் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனா்.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 23,239 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இத்துடன், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,968,405-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கொலம்பியாவில் 36,85,947 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 181,876 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT