உலகம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 2 பேர் பலி, பலர் படுகாயம்

23rd Jun 2021 01:51 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் இன்று காலை குண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகினர், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

லாகூரின் ஜோஹார் டவுன் பகுதியில் உள்ள வீட்டின் வெளியே திடீரென்று வெடிகுண்டு வெடித்தது. அந்த சமயத்தில், அப்பகுதியில் சென்று கொண்டிருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட பலர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குண்டு வெடிப்பில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

 

Tags : Pakistan Bomb Blast
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT