உலகம்

இந்தோனேசியா: மீண்டும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

DIN

இந்தோனேசியாவில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 14,536 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

உலகின் 4-ஆவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கரோனா தீநுண்மி அந்நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. திங்கள்கிழமை காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 14,536 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது. மேலும் 294 போ் உயிரிழந்ததன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 54,950-ஆக உயா்ந்துள்ளது.

27 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தோனேசியாவில் 1.2 கோடி பேருக்கே இதுவரை முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT