உலகம்

சீனாவில் 28 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிக் கட்டடம் (விடியோ)

19th Jun 2021 12:26 PM

ADVERTISEMENT

 

'வீட்டைக் கட்டிப்பார்' என்பது பழமொழி.. அதிலிருந்தே ஒரு வீட்டைக் கட்டுவது என்பது எவ்வளவு பெரிய வேலை என்று நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது. ஆனால், சீனாவின் சாங்ஷா பகுதியில் 28 மணிநேரத்தில் ஒன்றல்ல இரண்டல்ல 10 மாடிக் கட்டடடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு நாளுக்கும் கூடுதலாக சில மணி நேரங்கள் எடுத்து 10 மாடிக் கட்டடத்தை கட்டி முடித்துள்ளது பிராட் குரூப் என்ற நிறுவனம். அதனை விடியோவாக படம் பிடித்து யூடியூப்பிலும் பதிவிட்டுள்ளது.

இதில் எந்த மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை. அதாவது, சுவர்கள், ஜன்னல்கள், கதவுகளை தனித்தனியாக உருவாக்கி, அலமாரிகள், சமையல் கூடங்களையும் அதற்கான தொழிற்சாலைகளில் தயாரித்து தயாராக வைத்துக் கொண்டு, இந்தக் கட்டுமானம் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

 

கட்டுமானப் பணிகள் தொடங்கியதும், சுவர்கள், ஜன்னல்கள், அலமாரிகளை ஒன்றன் அருகே ஒன்று வைத்து, நட்டு, போல்டுகளைக் கொண்டு இறுக்கி, ஒவ்வொரு மாடியையும் முடித்து, பிறகு ஒன்றன் மேல் ஒன்றாக கட்டுமானங்களை மிகச் சரியாக அடுக்கி அதனை இணைத்துவிட்டு, கட்டுமானம் முழுமையாக முடிந்ததும், அந்தக் கட்டடத்துக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே.. பிகார் பெண்ணுக்கு 5 நிமிட இடைவெளியில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்திய பரிதாபம்

இந்த தொழில்நுட்பத்தின் உதவியோடு, சீனாவின் சாங்ஷா நகரில் கட்டப்பட்டிருக்கும் இந்த 10 மாடிக் கட்டடத்தை பிராட் குரூப் நிறுவனம் 28 மணி நேரம் 45 நிமிடத்தில் கட்டி முடித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்தக் கட்டடத்தைக் கட்டும் 4 நிமிட விடியோவை அந்த நிறுவனமே யூடியூப்பிலும் பதிவேற்றம் செய்துள்ளது.  அதில், மிக எளிதான கட்டுமானப் பணி. போல்டுகளை இணைத்து இறுக்கிவிட்டு, குடிநீர் மற்றும் மின்சார இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது என்று விடியோவில் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது மீண்டும் நம்ம பழமொழியைச் சொல்லிப் பாருங்கள்..

புகைப்படம் மற்றும் விடியோ நன்றி: பிராட் குரூப் யூடியூப்பிலிருந்து

Tags : China building house home
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT