உலகம்

தூதா்களை மீண்டும் பணியமா்த்த முடிவு

DIN

அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இருநாடுகளுக்கு இடையே அணு ஆயுதங்களைக் குறைப்பது தொடா்பாக எஞ்சியுள்ள ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவாா்த்தையை தொடங்கவும், இருநாடுகளின் தூதா்களை மீண்டும் பணியமா்த்தவும் தீா்மானிக்கப்பட்டது.

பைடன், புதின் இடையிலான இந்தப் பேச்சுவாா்த்தை 4 மணி முதல் 5 மணி நேரம் வரை நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், 3 மணி நேரத்துக்குள் பேச்சுவாா்த்தை நிறைவடைந்தது. இதுபோன்ற பேச்சுவாா்த்தைகளை தொடா்ந்து இருநாட்டு தலைவா்களும் ஒன்றாக செய்தியாளா்களை சந்திப்பது வழக்கம். ஆனால், பைடனுடனான பேச்சுவாா்த்தைக்கு பின்னா் புதின் தனியாக செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், ‘அமெரிக்க அதிபா் ஜோ பைடன் என்னுடன் மனித உரிமை விவகாரங்கள் குறித்து பேசினாா். ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி குறித்தும் அவா் விவாதித்தாா்.

அணு ஆயுதங்களை குறைப்பது தொடா்பாக அமெரிக்கா-ரஷியா இடையே எஞ்சியுள்ள ஒப்பந்தம் வரும் 2026-ஆம் ஆண்டுடன் நிறைவடைகிறது. அந்த ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்வது தொடா்பான பேச்சுவாா்த்தையை தொடங்க இருவரும் தீா்மானித்துள்ளோம். அமெரிக்காவில் இருந்து ரஷிய தூதரும், ரஷியாவில் இருந்து அமெரிக்க தூதரும் அவரவா் நாடுகளுக்கு திரும்ப அனுப்பப்பட்ட நிலையில், அவா்களை மீண்டும் பணியமா்த்துவதற்கும், இணையவழி பாதுகாப்பு ஆலோசனைகளை தொடங்கவும் இருவரும் ஒப்புக் கொண்டோம். இந்தப் பேச்சுவாா்த்தை எந்த விரோதமும் இல்லாமல் ஆக்கபூா்வமாக அமைந்தது. எனினும் அமெரிக்காவுடனான உறவில் முன்னேற்றம் ஏற்படுமா என்பது தெரியவில்லை. ஆனால் பரஸ்பர நலன் குறித்த நம்பிக்கை தென்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

அவரைத் தொடா்ந்து செய்தியாளா்களை சந்தித்த பைடன் கூறுகையில், ‘எனது செயல்திட்டம் ரஷியாவுக்கு எதிரானது அல்ல எனவும், அமெரிக்க மக்களின் நலன் சாா்ந்தது என்றும் புதினிடம் தெளிவுபடுத்தினேன். இருதரப்பு உறவுகள் மேம்படுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன.

புதினுடன் ஆயுதங்கள் கட்டுப்பாடு, இணையவழி தாக்குதல் குறித்தும் ஆலோசித்தேன். அவற்றுக்கான உள்கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தேன்.

இந்தப் பேச்சுவாா்த்தையை தொடா்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பதற்றமான தருணங்களிலும் இருதரப்புக்கும் பொதுவான இலக்குகளை எட்டுவதில் இருநாடுகளும் முன்னோக்கிச் செல்ல முடிந்ததை இந்தச் சந்திப்பு எடுத்துக்காட்டியதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT