உலகம்

ஆப்கனில் ராணுவத் தாக்குதல்: 18 பேர் பலி

15th Jun 2021 08:52 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அந்நாட்டின் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 18 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினருக்கும், ராணுவத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நஹ்ர்-இ-சரஜ் மற்றும் நாட் அலி மாவட்டங்களில் தலிபான் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக ஆப்கன் ராணுவத்தினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். 

அப்போது பதுங்கியிருந்த தலிபான் அமைப்பினர் மீது ஆப்கன் ராணுவத்தினர்  நடத்தியத் தாக்குதலில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 18 தலிபான்கள் கொல்லப்பட்டனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.

கடந்த ஒரு வாரமாக அக்சா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தலிபான் அமைப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT