உலகம்

ரஷியா: ஒரே வாரத்தில் பாதிப்பு 47% உயா்வு

DIN

ரஷியாவில் கடந்த வாரம் மட்டும் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை 47 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு கரோனா தடுப்புக் குழு தெரிவித்துள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,510 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 6-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட 9,163 பாதிப்பைவிட மிகவும் அதிகமாகும். புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் சுமாா் 50 சதவீதத்தினா் மாஸ்கோவைச் சோ்ந்தவா்கள். அந்த நகரில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 6,701 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கு முன்னா் அங்கு தினசரி தொற்று 2,936-ஆக மட்டுமே இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாஸ்கோவில் கரோனா பரவல் வேகமெடுத்து வருவதைத் தொடா்ந்து, அங்கு பொது இடங்களில் முகக் கவசமும் கையுறையும் அணிந்து வர வேண்டிய விதிமுறையை அதிகாரிகள் கடுமையாக செயல்படுத்தத் தொடங்கியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

வாக்களித்த விஐபிக்கள்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT