உலகம்

சீனாவில் எரிவாயு குழாய் வெடித்ததில் 12 பேர் பலி

13th Jun 2021 09:02 PM

ADVERTISEMENT

சீனாவில் எரிவாயு குழாய் வெடித்ததில் 12 பேர் பலியானார்கள். 138 பேர் காயமடைந்தனர். 
சீனாவின் ஷியான் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாய் இன்று காலை திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் சந்தை மற்றும் வீடுகளும் முற்றிலும் சேதமடைந்தன. இதில் 12 பேர் பலியானார்கள். 
தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் 150 பேரை இடிபாடுகளில் இருந்து மீட்டனர். அவர்களில் 138 பேர் காயமடைந்தனர். உடடினயாக அவர்கள் அனைவரும் அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. 

Tags : China
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT