உலகம்

ஹஜ் புனித பயணத்துக்கு உள்நாட்டினர் 60,000 பேருக்கு மட்டுமே அனுமதி: சௌதி அரேபியா

PTI


துபை: கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு உள்நாட்டினர் 60,000 பேர் மட்டுமே ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று சௌதி அரேபியா அறிவித்துள்ளது.

சௌதி அரேபியாவின் அரசு ஊடகம் மூலம், இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஹஜ் அமைச்சகமும், உம்ராவும் இணைந்து இந்த முடிவை எடுத்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, வெளிநாட்டிலிருந்து ஏற்கனவே சௌதி அரேபியா சென்று வசித்து வந்த சில ஆயிரம் பேர் ஹஜ் புனித பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர். 

வழக்கமாக, ஹஜ் புனித பயணத்துக்கு அனுமதிக்கப்படுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் சுமார் 160 நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது வழக்கம். 

இந்த ஆண்டு ஹஜ் புனித பயணம் ஜூலை மாதம் மத்தியில் தொடங்கவிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT