உலகம்

92 நாடுகளுக்கு 50 கோடி தடுப்பூசிகள்: பைடன் முடிவு

10th Jun 2021 03:36 PM

ADVERTISEMENT


50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி 92 நாடுகளுக்கு வழங்குவது குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிடவுள்ளார்.

இதுபற்றி வெள்ளை மாளிகை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"அமெரிக்கா 50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி அதை குறைந்த மற்றும் நடுத்தரத்துக்கும் குறைவான வருவாயுள்ள நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் என 92 நாடுகளுக்கு வழங்குவது குறித்த அறிவிப்பை அதிபர் பைடன் இன்று அறிவிப்பார். இவை ஆகஸ்ட் 2021 முதல் விநியோகிக்கப்படவுள்ளன. 20 கோடி தடுப்பூசிகள் இந்தாண்டு இறுதிக்குள் விநியோகிக்கப்படும். மீதமுள்ள 30 கோடி தடுப்பூசிகள் 2022 முதல் பாதிக்குள் விநியோகிக்கப்படும்."

இந்தியா, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்பட பல்வேறு ஆசிய நாடுகளுக்கு 70 லட்சம் தடுப்பூசிகளை அனுப்ப பைடன் நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : biden
ADVERTISEMENT
ADVERTISEMENT