உலகம்

இலங்கையிலும் உருமாறிய ஆல்ஃபா, டெல்டா வகை கரோனா வைரஸ்

10th Jun 2021 05:48 PM

ADVERTISEMENT


கொழும்பு: இலங்கையில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை பரிசோதித்ததில், அவர்களில் பலருக்கு கரோனா வைரஸின் உருமாறிய அதிதீவிர தன்மை கொண்ட ஆல்ஃபா, டெல்டா வகை கரோனா வைரஸ்கள் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வகை கரோனா வைரஸ் மற்றும் பிரிட்டனில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட ஆல்ஃபா வைரஸ்கள், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில், 9 இடங்களில் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி, 80 பேருக்கு ஆல்ஃபா வைரஸும், தனிமைப்படுத்தும் முகாமில் தங்கியிருந்த ஒருவருக்கு டெல்டா வைரஸும் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன்களப் பணியாளர்களும் அடங்குவர்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் முதல் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அங்கு மூன்றாம் கரோனா அலை எழும் அபாயம் உருவாகியிருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT