உலகம்

ஒலிம்பிக் போட்டியை எதிர்க்கும் ஜப்பான் மக்கள்

8th Jun 2021 03:50 PM

ADVERTISEMENT

கரோனா பரவலின் மத்தியில் நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிக்கு ஜப்பான் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கரோனா தொற்று பரவல் உலகம் முழுவதும் நிலவி வரும் நிலையில் ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் ஜூலை மாதம் ஜப்பானில் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் கரோனா தொற்றை அலட்சியம் செய்து ஜப்பான் அரசு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதாக அந்நாட்டு மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஜப்பான் ஒலிம்பிக் போட்டிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது தெரியவந்துள்ளது.

ஆய்வில் பங்கேற்ற 50 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் ஒலிம்பிக் போட்டி நடத்துவது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் கரோனா பரவல் காரணமாக ஜப்பான் நாட்டிற்கு பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Japan Olumpic 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT