உலகம்

பாகிஸ்தான்: வேன் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் பலி

8th Jun 2021 02:37 PM

ADVERTISEMENT

 

பாகிஸ்தானின் கைபர் - பக்துன்க்வா மாகாணத்தில் இன்று பயணிகள் வேன் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 உள்பட 17 பேர் பலி யாகினர்.

சுற்றுலா செல்ல சிலாஸிலிருந்து புறப்பட்ட குடும்பத்தினர் வந்த வேன் ராவல்பிண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த வேன், பனிபா என்ற இடத்தில் வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த இந்துஸ் ஆற்றில் கவிழ்ந்தது. ஒரு குடும்பத்தினர் இந்த வாகனத்தை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு வந்ததுள்ளனர்.

இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் என 16 பேர் அந்த வேனில் வந்த போது இந்த விபத்து நேரிட்டு, 16 பேர் மற்றும் ஓட்டுநர் உள்பட 17 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஆற்றில் அதிகளவில் தண்ணீர் ஓடுவதால், ஆழம் அதிகமாக இருந்தது. இதனால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டது. நீச்சல் தெரிந்த மீட்புப் பணி வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
 

Tags : பாகிஸ்தான் Pakistan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT