உலகம்

பிரிட்டன் அரசு, செய்தி நிறுவனங்களின் இணையதள பக்கங்கள் முடக்கம்

8th Jun 2021 04:36 PM

ADVERTISEMENT

பிரிட்டனில் செயல்பட்டு வரும் சர்வதேச செய்தி நிறுவனங்களின் இணைய பக்கங்கள் இணைய சேவை பாதிப்பு காரணமாக முடங்கின.

பிரபல செய்தி நிறுவனங்களாக தி கார்டியன், சிஎன்என், நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்டவை அறியப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் பிரிட்டனில் ஏற்பட்ட இணைய சேவை பாதிப்பு காரணமாக செய்தி நிறுவனங்கள் மற்றும் பிரிட்டன் அரசின் இணையதள பக்கம் முடங்கின.

எனினும் இந்த தொழில்நுட்ப சிக்கல் விரைவில் சரி செய்யப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச செய்தி நிறுவனங்களின் இணைய பக்கங்கள் முடங்கியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ADVERTISEMENT

Tags : newyork times CNN The Guardian
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT