உலகம்

சீனாவில் கத்திக்குத்து தாக்குதல்: 6 பேர் பலி

6th Jun 2021 04:58 PM

ADVERTISEMENT

சீனாவில் நிகழ்ந்த கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் பலியானார்கள். 

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள அன்கிங் நகரில் நேற்று கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள். 14 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

காயமடைந்தவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஹுய்னிங் கவுண்டியைச் சேர்ந்த வு(25) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சமீபத்திய வாரங்களில் சீனாவில் நடந்த மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

ADVERTISEMENT

Tags : China
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT