உலகம்

இலங்கையில் கனமழை: 14 பேர் பலி

6th Jun 2021 06:24 PM

ADVERTISEMENT

இலங்கையில் கனமழைக்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். 

இலங்கையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ரத்னபுரா உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. 15,658 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. 800க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 

2,45,000 பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நிலங்களும் நீரில் மூழ்கின. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் ராணுவம் மற்றும் கப்பல்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

வரும் நாள்களில் 150 மிமீ அளவுக்கு மழை பெய்யலாம் என்றும் குறிப்பாக கடுமையான மின்னலிலிருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இலங்கை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. 

ADVERTISEMENT

Tags : sri lanka
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT