உலகம்

அமெரிக்கா தைவானுக்கு 7.5 லட்சம் கரோனா தடுப்பூசிகள்

6th Jun 2021 11:17 PM

ADVERTISEMENT

தைவானுக்கு 7.5 லட்சம் கரோனா தடுப்பூசிகளை வழங்கி உதவப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் கோடிக்கணக்கான கரோனா தடுப்பூசிகளை பிற நாடுகளுடன் பகிா்ந்துகொள்ள அதிபா் ஜோ பைடன் முடிவு செய்துள்ளாா். அதன் ஒரு பகுதியாக, தைவானுக்கு 7.5 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது.

தைவான் தனி நாடாக செயல்பட்டு வந்தாலும், அதனை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாக சீனா கருதி வருகிறது. இதன் காரணமாக, தங்களுக்குக் கிடைக்கக் கூடிய சா்வதேச கரோனா உதவிகளை சீனா தடுத்து வருவதாக தைவான் அண்மையில் குற்றம் சாட்டியது. இந்தச் சூழலில், அமெரிக்கா அந்த நாட்டுக்கு கரோனா தடுப்பூசி வழங்கி உதவவுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT