உலகம்

வடகிழக்கு சீனாவில் ஆலங்கட்டி மழை: ஒருவர் பலி, 16 பேர் காயம்

2nd Jun 2021 01:20 PM

ADVERTISEMENT

 

வடகிழக்கு சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் சூறாவளி மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ததில் ஒருவர் பலியானர் மற்றும் 16 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த சூறாவளியானது நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி சுமார் 30 நிமிடங்கள் ஷாங்கி நகரத்தை கடுமையாகத் தாக்கியுள்ளது. இதனால் நான்கு உள்ளூர் நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

புதன்கிழமை காலை 6 மணி நிலவரப்படி. சூறாவளிக்கு 148 வீடுகள் சேதமாகியுள்ளது. விவசாய நிலங்கள் அழிந்ததாகவும் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

240க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் பொருளாதார இழப்பு 5.12 மில்லியன் யுவான் (சுமார் 795,400 யு.எஸ். டாலர்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

பலத்த காயமடைந்த ஒருவர் சிகிச்சையில் உள்ளார், மற்றவர்கள் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT