உலகம்

வேவு பார்க்கப்பட்ட விவகாரம்: பெகாஸஸ் மென்பொருள் முடக்கம்

31st Jul 2021 01:33 PM

ADVERTISEMENT

பெகாஸ்ஸ உளவு மென்பொருள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், அதனை என்எஸ்ஒ நிறுவனம் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் பெகாஸஸ் மென்பொருள் மூலம் வேவு பார்ப்பதற்கான இலக்கில் இருந்ததாக செய்தி வெளியானது. அரசுகளுக்கு மட்டுமே இதனை விற்றதாக மென்பொருளை தயாரித்த என்எஸ்ஒ நிறுவனம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில், பெகாஸஸை பயன்படுத்த முடியாதவாறு என்எஸ்ஒ நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து என்எஸ்ஒ நிறுவனத்தின் அலுவலர் ஒருவர் தேசிய பொது வானொலியிடம் பேசுகையில், "பெகாஸ்ஸ மென்பொருளை வாங்கிய சில வாடிக்கையாளர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் பெகாஸஸை பயன்படுத்துவதிலிருந்து தவிர்க்கும் வகையில் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதுகுறித்து இஸ்ரேலின் தேசிய பொது வானொலி கூறுகையில், "எந்த நாட்டின் வாடிக்கையாளர் எல்லாம் முடக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. ஏனெனில், வாடிக்கையாளர்களின் விவரங்கள் குறித்து வெளியிட இஸ்ரேல் பாதுகாப்பு ஒழுங்காற்று ஆணையம் தடை விதித்துள்ளது.

ADVERTISEMENT

பெகாஸஸ் சர்ச்சை எழுந்த நிலையில், மென்பொருளின் விற்பனைக்கு இஸ்ரெல் அரசு கட்டுப்பாடு விதித்தது. இதன் காரணமாக, பல்வேறு நாடுகள் இஸ்ரேலுக்கு அழுத்தம் அளித்துவருகிறது. 

Tags : nso Pegasus israel
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT