உலகம்

இது தேவையா? எலான் மஸ்க்குக்கு பதில் தெரிவித்து கிண்டலுக்குள்ளான பெண்

31st Jul 2021 08:34 PM

ADVERTISEMENT

தன்னைப் பின்தொடர்ந்த எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்து இளம்பெண் பதிவிட்டதற்கு எலான் மஸ்க் அளித்த பதில் இணையத்தில் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் தலைவராக இருப்பவர் எலான் மஸ்க். இவரது நிறுவனம் தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.

டிவிட்டர் தளத்தில் அதிகம் இயங்கி வரும் எலான் மஸ்க் பல்வேறு தரப்பினருடன் உரையாடி வருகிறார். 

 

ADVERTISEMENT

இந்நிலையில் ரெபெக்கா எனும் பெண்ணின் டிவிட்டர் பக்கத்தை எலான் மஸ்க் பின்தொடர்வதைக் கண்ட அப்பெண் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார். அதனைத் தொடர்ந்து எலான் மஸ்க்கைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து பதிவிட்ட அவர் எலான் மஸ்க் தன்னை பின் தொடர்வதால் நான் பெருமையடைகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க | யூடியூபர் மதன்கெளரிக்கு பதிலளித்த எலான் மஸ்க்

இதற்கு பதிலளித்த எலான் மஸ்க் மன்னிக்கவும், தவறுதலாக நடந்துவிட்டது என குறிப்பிட்டார். எலான் மஸ்க்கின் இந்த பதிலைக் குறிப்பிட்டு இணையதள பயனர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Tags : Tesla elon musk
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT