உலகம்

ஆப்கானிஸ்தான் : வாகன விபத்தில் 20 பேர் பலி , 18 பேர் காயம் 

31st Jul 2021 03:29 PM

ADVERTISEMENT

கிழக்கு ஆப்கானிஸ்தானின் லக்மன் பகுதியில் ஏற்பட்ட இருவேறு வாகன விபத்துகளில் சிக்கி 20 பேர் இறந்ததாகவும் , 18 பேர் வரை காயமடைந்ததாகவும்  அரசுத் தரப்பில்  கூறப்பட்டிருக்கிறது .

இரண்டு பக்கம் நடைபெற்ற இந்த விபத்துகளில்  இன்று (சனிக்கிழமை ) தவ்லாதலை பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனத்தில் இருந்த 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் , 8 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும்  நேற்று (வெள்ளிக்கிழமை) லக்மன் பேருந்து விபத்தில் 8 பேர் பலியானார்கள் , 10 பேர் காயங்களுடன் லக்மன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தனர்.

இதையும் படிக்கபொன்னியின் செல்வனா ? ஸ்பைடர் மேனா ?: படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இதோ 

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும்  வாகன நெரிசலும் , மோசமான சாலைகளுமே  விபத்திற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

ADVERTISEMENT

இந்த விபத்துகளில் பெண்களும் , குழந்தைகளும் கூட பலியானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Tags : afghanistan accident
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT