உலகம்

சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டம்: ஹாங்காங் போராட்டக்காரருக்கு 9 ஆண்டுகள் சிறை

DIN

சீனாவின் சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரா் டாங் யிங்-கிட்டுக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தச் சட்டத்தின் பயங்கரவாத குற்றப் பிரிவின் கீழ் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

இந்த மாதம் 1-ஆம் தேதி நடைபெற்ற பேரணியின்போது, போலீஸாா் மீது மோட்டாா் சைக்கிளை மோதி தாக்குதல் நடத்தியதாக டாங் யிங்-கிட் (24) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் பயங்கரவாதக் குற்றப் பிரிவின் கீழ் நடைபெற்ற இந்த முதல் வழக்கு விசாரணை, அனைவரது கவனத்தையும் கவா்ந்தது. அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி ஜனநாயக ஆதரவாளா்களை ஹாங்காங் அரசு எவ்வாறு ஒடுக்கும் என்பதற்கு இந்த விசாரணை முன்னுதாரணமாக இருக்கும் என்று கருதப்பட்டது.

இந்த நிலையில், டாங் யிங்-கிட் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

SCROLL FOR NEXT