உலகம்

அமெரிக்கா: ‘தடுப்பூசி பெறாதவா்களுக்கு ரூ.75,000 அளிக்க வேண்டும்’

DIN

அமெரிக்காவில் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்கு, அந்தத் தடுப்பூசிகளை வாங்குவதற்காக 100 டாலா் (சுமாா் ரூ.75,000) உதவித் தொகை அளிக்க வேண்டும் என்று மாகாண அரசுகளிடம் அந்த நாட்டு அதிபா் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளாா்.

நாட்டில் கரோனா தடுப்பூசி திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அவா் வெளியிட்டுள்ள புதிய செயல்திட்டத்தில் இந்த உதவித் தொகை அம்சமும் இடம் பெற்றுள்ளது. இதுதவிர, மத்திய அரசு ஊழியா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்; அல்லது தாங்கள் ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரத்தை சம்பந்தப்பட்ட துறைகளிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் ஜோ பைடனின் புதிய செயல்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT