உலகம்

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.6 கோடியாக  உயர்வு 

DIN

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.6 கோடியாக  உயர்வு என ஹாப்கின்ஸ்  பல்கலைக்கழகம் தகவல் .

கரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தில் உலகளவில் தொற்றால்  பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 

இதுகுறித்து ஹாப்கிங்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் கரோனா அதிகம்  பாதித்த நாடுகளிலேயே அமெரிக்கா முதல் இடமும் , இந்தியா இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. 

அமெரிக்காவில் 3.75 கோடி பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் 6.12 லட்சம் பேர் வரை இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் கரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள் 3.1 கோடி பேர் .

மேலும் 30 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பாளர்களைக் கொண்ட நாடுகளாக பிரேசில் -1.98 கோடி , பிரான்ஸ் - 61.4 லட்சம் , ரஷ்யா -61.3 லட்சம் ,இங்கிலாந்து - 58 லட்சம் , துருக்கி - 56.8 லட்சம் ,  அர்ஜென்டினா-49 லட்சம் ,கொலம்பியா- 47.6 லட்சம்  ,ஸ்பெயின் - 44.2 லட்சம்  , இத்தாலி - 43.3 லட்சம் , ஈரான்-38.2 லட்சம்  ,ஜெர்மனி - 37.7 லட்சம் , இந்தோனேசியா - 33.3 லட்சம்  என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

மேலும்  பிரேசில் , அதிக கரோனா இறப்புக்களைக் கொண்ட நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்து 5.53 லட்சம் இறப்புகளுடன் இரண்டாம் இடத்தில் இருப்பதும் தெரியவந்திருக்கிறது.

இந்தியாவில் 4.22 லட்சம் கரோனா உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT