உலகம்

ஆப்கானிஸ்தான் : வெள்ளப்பெருக்கில் சிக்கி 40 பேர் பலி

29th Jul 2021 03:48 PM

ADVERTISEMENT

ஆப்கனிஸ்தான் நாட்டின் காம்திஷ் பகுதியில் நேற்று ( புதன்கிழமை) இரவு பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில்  40 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை பலியான 40 பேரின் உடலை கைப்பற்றியதாகவும் 150 வரை மாயமானதாகவும் தெரிவித்தனர். 

இதையும் படிக்க ஆப்கானிஸ்தான் : ராணுவத் தாக்குதலில் 28 தலிபான்கள் பலி

இரவோடு இரவாக 80 வீடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மீட்புப் பணியில் இருந்த மீட்புப்படையினர் கூறியிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

கடந்த மாதம் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 12 பலியானது குறிப்பிடத்தக்கது .

Tags : Afghanistan flood
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT