உலகம்

ஜெர்மனி தொழிற்சாலை வெடிவிபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரம்

28th Jul 2021 09:24 PM

ADVERTISEMENT

ஜெர்மனியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. ஒருவர் பலியானார். மேலும் இதுவரை 31 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

ஜெர்மனியில் உள்ள லெவர்குசன் நகரத்தில் வேதியியல் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை வெடிவிபத்து ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஒருவர் பலியாகி இருந்த நிலையில் மேலும் ஒருவர் மரணமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போதைய நிலையில் 31 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

தொழிற்சாலையில் உள்ள குளிரூட்டியில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : Germany fire
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT