உலகம்

இன்ஸ்டாகிராம் : ‘ ரீல்ஸ் ‘ விடியோக்களின் நேரம் நீட்டிப்பு 

DIN

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் ‘ ரீல்ஸ் ‘ என்கிற விடியோக்களை பதிவிடும் பக்கத்தில் இதுவரை 30 வினாடிகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 60 வினாடி வரை தங்களின் விடியோக்களை பதிவிடலாம் என இன்ஸ்டா நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக ரீல்ஸ் ஸ்டிக்கர்ஸ் மற்றும் ஆடியோவிலிருந்து எழுத்தாக மாறும் அமைப்பை கொண்டு வந்தது . இந்நிலையில்  சமூக வலைதளங்களில் இருப்பவர்கள் தங்களுடைய தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக நடிப்பையும் , நடனத்தையும் ‘ ரீல்ஸ் ’களில் வெளியிட்டு வருவதால் 30 வினாடி பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் இருப்பதில்லை என்கிற கருத்து இருந்து வந்த  நிலையில் தற்போது அந்நிறுவனம் 60 வினாடிகளாக அதிகரித்திருக்கிறது. 

டிக்டாக் செயலியில் 3 நிமிடம் வரை விடியோ பதிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோடு அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

SCROLL FOR NEXT