உலகம்

பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சை கருத்து..பின்வாங்கிய இம்ரான் கான்

DIN

பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சை கருத்து தெரித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது அதற்கு அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை தொடர்பான விவகாரங்களில் பாதிக்கப்பட்டவரே பொறுப்பு ஏற்க வேண்டும் பாகி்ஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இது பெரும் விமர்சனத்திற்குள்ளான நிலையில், தான் கூறிய கருத்துக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

பிபிஎஸ் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களே அந்த குற்றத்திற்கு முற்றிலும் பொறுப்பு ஏற்க வேண்டும். இதில், தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

எந்தளவுக்கு உணர்வுகளை தூண்டினாலும் அல்லது உணர்வுகளை தூண்டும் வகையில் ஆடைகளை அணிந்தாலும் குற்றத்தில் ஈடுபடுபவரே பொறுப்பு ஏற்க வேண்டும். பாதிக்கப்ப்படவர் பொறுப்பு அல்ல. எனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. 

பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் பாகி்ஸ்தான் சமூகம் குறித்துதான் பேசப்பட்டது. நான் இதை சொல்லியே ஆக வேண்டும். நான் அளித்து நேர்காணல்கள் குறித்து எனக்கு தெரியும். பாதிக்கப்பட்டவரே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற முட்டாள்தனமான கருத்தை சொல்லியதே இல்லை. அனைத்து பெண்களையும் இஸ்லாம் மதிக்கிறது" என்றார்.

கடந்த மாதம், உணர்வுகள் தூண்டப்படுவதை தவிர்த்தாலே பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கலாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தென் சென்னையில் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

SCROLL FOR NEXT