உலகம்

வங்கதேசம்  : நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் பலி

DIN

வங்கதேசத்தின்  காஸ் பஜார் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் உயிரிழந்தனர்.

இறந்தவர்களில் இரண்டு ஆண் குழந்தைகள் , மூன்று பெண் குழந்தைகள் எனவும் அவர்களின்  பெற்றோர்கள் இடைவிடாத கனமழை காரணமாக அபாயத்தை உணர்ந்து வீட்டை வெளியே பாதுகாப்பான இடத்திற்கு  சென்றுவிட்டனர் எனவும்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

அதை அறியாமல் தூங்கிக்கொண்டிருந்த குழைந்தைகள் அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கிருந்து வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கி இறந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தும் நிலச்சரிவுகளில் சிக்கியிருப்பதாலும்  மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
 
தொடர்ந்து அங்கு பெய்துவரும் கனமழையால் நேற்று ( செவ்வாய்க்கிழமை ) 8 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது . 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT