உலகம்

பிரேசிலில் கோவாக்சின் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை நிறுத்தம்

24th Jul 2021 12:37 PM

ADVERTISEMENT

கோவாக்சின் தடுப்பூசியை விற்பதற்கான ஒப்பந்தத்தை பாரத் பயோடெக் நிறுவனம் ரத்து செய்த நிலையில், பிரேசிலில் கோவாக்சின் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசியை பிரேசிலில் விற்பதற்காக இரண்டு நிறுவனங்களுடன் பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால், ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கோவாக்சின் தடுப்பூசியை விற்பதற்கான ஒப்பந்தத்தை பாரத் பயோடெக் நிறுவனம் நேற்று (வெள்ளிக்கிழமை) ரத்து செய்தது.

இந்நிலையில், பிரேசிலில் கோவாக்சின் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார ஒழுங்காற்று அமைப்பு தெரிவித்துள்ளது.

இரண்டு கோடி கோவாக்சின் தடுப்பூசிகளை வாங்கும் வகையில் பிரீசிசா மெடிக்காமென்டாஸ் மற்றும் என்விக்ஸியா பார்மாசூட்டிகல்ஸ் எல்.எல்.சி. ஆகிய நிறுவனங்கள் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.

ADVERTISEMENT

பாரத் பயோடெக் நிறுவனத்திடம் தடுப்பூசிகள் அதிக விலையில் வாங்கப்பட்டதாகவும் அதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் பிரேசிலில் செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டன. இதில், பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாராவுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரவீன் பவார் மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதில், "கோவாக்சின் சர்ச்சை குறித்து ஊடகத்தில் வெளியான செய்திகள் குறித்து தெரியவந்துள்ளது. பாரத் பயோடெக் என்ற தனியார் நிறுவனம் வெளிநாட்டுடன் மேற்கொண்ட வணிக ரீதியான ஒப்பந்தம் இது. இதற்கும் அரசுக்கும் சம்மந்தம் இல்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
 

Tags : Clinical Trials Bharat Biotech Brazil COVAXIN
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT