உலகம்

குழந்தையைக் காப்பாற்றிய பின் மரணித்த தாய்: சீனாவில் நடந்த கண்கலங்க வைக்கும் சம்பவம்

23rd Jul 2021 08:23 PM

ADVERTISEMENT

சீன வெள்ளத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கிய தாய் தனது குழந்தையைக் காப்பாற்றிய பின் இறந்தது மீட்புப் பணியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் திங்கள்கிழமை  பெய்த அதீத கனமழையால் தலைநகர் ஜெங்ஜோ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வெள்ளத்தில் மிதந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் மாயமானவர்களைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

வெள்ளத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை மீட்புப் பணி வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் தாய் மற்றும் அவரது 4 மாதக் குழந்தையை கண்டறிந்த மீட்புப் பணி வீரர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

ADVERTISEMENT

மீட்புப் படையினரைக் கண்ட குழந்தையின் தாய் இடிபாடுகளுக்கு மத்தியில் தனது குழந்தையை தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். குழந்தையை காப்பாற்றுவதற்காக மீட்புப் பணியாளர்களிடம் குழந்தையை தூக்கிவீசிய பிறகு தாய் பலியானார்.

தனது குழந்தையை காப்பாற்றுவதற்காக இடிபாடுகளுக்கு மத்தியில் போராடி வந்த தாய் குழந்தை காப்பாற்றப்பட்ட உடன் மரணித்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Tags : China China Flood
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT