உலகம்

புதிய வகை கரோனாவுக்கு வாய்ப்பு: பிரான்ஸ் நிபுணர் எச்சரிக்கை

23rd Jul 2021 05:24 PM

ADVERTISEMENT

நடப்பாண்டில் மற்றுமொரு கரோனா வைரஸ் உருவாக சாத்தியம் உள்ளது என பிரான்ஸ் அரசின் விஞ்ஞானிகள் குழு தலைவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் டெல்ஃப்ரைஸி தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கரோனா பரவல் அதிகரிக்க காரணமாக ஆல்பா, டெல்டா வகை வைரஸ்கள் இருந்து வரும் நிலையில் மரபியல் மாற்றம் அடைந்து வரும் கரோனா வைரஸானது விஞ்ஞானிகளுக்கு பெரும் சவால் விடுத்துவருகிறது.  

இதனிடையே, கரோனா பரவல் தீவிரமடைய டெல்டா பிளஸ் வகை முக்கியக் காரணமாக அமைந்தது. இந்நிலையில், இந்தாண்டின் மழைக் காலத்தில் மற்றொரு கரோனா வகை வைரஸ் உருவாக சாத்தியம் உள்ளது என பிரான்ஸ் அரசின் விஞ்ஞானிகள் குழு தலைவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் டெல்ஃப்ரைஸி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "புதிய வகை கரோனா ஏற்படுத்தவுள்ள விளைவுகளை கணிக்க முடியவில்லை. ஆனால், மரபியல் மாற்றம் அடைவதற்கு அதற்கு ஒப்பீட்டளவில் குறைந்த திறனே உள்ளது. 

ADVERTISEMENT

எனவே, தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பது முகக்கவசம் அணிவது போன்றவற்றை மக்கள் மீ்ண்டும் பின்பற்ற வேண்டும். மக்கள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும்பட்சத்தில் 2022 அல்லது 2023க்குள் இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும்.

தடுப்பூசி செலுத்திய நாடுகள் ஒரு புறமும் செலுத்தாத நாடுகள் மறு புறமும் உள்ள நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, நாம் எப்படி வாழப் போகிறோம் என்பதில்தான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது சாத்தியமாகும்." என்றார்.

கரோனா நான்காவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்களுக்கு செல்ல சுகாதார நுழைவுச் சீட்டு திட்டம் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் , கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கும் மட்டுமே நுழைவுச் சீட்டு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : France Corona New Corona Variant
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT