உலகம்

பாகிஸ்தான் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த எருமை மாடு

DIN

பக்ரீத் பண்டிகையையொட்டி செய்தி சேகரிக்கச் சென்ற பாகிஸ்தான் பத்திரிகையாளர் அமின் ஹபீஸ் எருமை மாட்டிடம் பேட்டி எடுத்த விடியோ இணையத்தைக் கலக்கிவருகிறது.

வித்தியாசமான செய்தி தொகுப்பை வழங்குவதில் பெயர் பெற்றவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் அமின் ஹபீஸ். செய்திகளை கேலியும், கிண்டலுமாக ரசிக்கும்படியான உடல்மொழியுடன் வழங்கும் இவரது பணிக்கு ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி செய்தி சேகரிக்க மாட்டுக் கொட்டகைக்குச் சென்ற அமின் செய்தி வழங்கிக் கொண்டிருக்கும்போது அருகில் இருந்த எருமை மாட்டிடம் கேள்வி கேட்டார். 

லாகூரின் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது? லாகூரில் என்ன உணவை உண்டீர்கள்? உள்ளிட்ட கேள்விகளை அவர் எருமை மாட்டிடம் எழுப்பினார்.

வேடிக்கையான அந்தத் தருணத்தில் எருமை மாடு கத்தியது செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்தது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. 

இதன் காணொலியை சக பத்திரிகையாளர் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்தக் காணொலி தற்போது இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT