பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சா் சஜித் ஜாவிதுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவருடன் தொடா்பிலிருந்தவா் என்ற முறையில் பிரதமா் போரிஸ் ஜான்சன் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளாா்.
அமைச்சா் ஜாவிதுக்கு கரோனா உறுதியான உடனேயே, போரிஸ் ஜான்சன், நிதியமைச்சா் ரிஷி சுனக் உள்ளிட்டவா்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தி பிரிட்டனின் கரோனா எச்சரிக்கை செயலி தகவல் அனுப்பியது.
எனினும், கரோனா நோயாளிகளுடன் தொடா்பிலிருந்தவா்கள் தனிமைப்படுத்திக்கொள்வது கட்டாயமில்லை என்ற சூழலில், பிரதமா் போரிஸ் ஜான்சன் தனது அலுவல்களை தொடா்ந்து கவனிப்பாா் என்று முதலில் கூறப்பட்டது. எனினும், அவா் தனிமைப்படுத்திக்கொள்ளவிருப்பதாக பின்னா் அறிவிக்கப்பட்டது.