உலகம்

இராக் பிரதமரை சந்திக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

17th Jul 2021 12:45 PM

ADVERTISEMENT

வாஷிங்டன் : அமெரிக்கா மற்றும் இராக் நாடுகளுக்கிடையே  இருதரப்பு ஒத்துழைப்பிற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட  இருநாட்டு தலைவர்களும் சந்தித்துக்கொள்ள இருக்கிறார்கள். 

இது குறித்து வெள்ளைமாளிகை தரப்பிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடனும் இராக்  பிரதம மந்திரி  முஸ்தபா அல் காதிமியும் இருநாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பைப் பற்றியும் கல்வி, மருத்துவம் , காலச்சாரம் , சுற்றுச்சூழல் மேம்பாடு போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்த இருப்பதாகவும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளைக் பற்றியும் பேச இருக்கிறார்கள் என்பதை தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இராக் நாட்டில் நிலவி வரும் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவின்  அச்சுறுத்தல்களை இரு நாடும் இணைந்து முறியடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்சந்திப்பு ஜுலை 26 அன்று வெள்ளைமாளிகையில் நடைபெற இருக்கிறது

Tags : iraq america joe baiden
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT